::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Saturday, April 23, 2011

நமது கூத்தாநல்லூரில் இரு நாட்களாக கன மழை

தமிழகத்தில் இன்றும் அநேக இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குமரி கடல் பகுதியில் வளிமண்டல மேல் அடுக்கில் நேற்று முன்தினம் ஒரு சுழற்சி உருவானது. இதன் காரணமாக தமிழகத்தில் நேற்றும், இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. சில இடங்களில் சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதையடுத்து அந்த காற்று சுழற்சி இன்றும் நீடிப்பதால் தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினமும், நேற்று இரவும் நமது கூத்தாநல்லூரில் இ‌டியுடன் கூடிய கனமழை பெய்தது. கோடை வெயிலின் உஷ்னத்தில் வாடிய மக்கள் கோடை மழையின் காரணமாக மகிழ்ச்சி அடைந்தனர்.

இன்றும் வெயிலின் தாக்கம் குறைந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.