::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Wednesday, April 6, 2011

வாக்காளர் சீட்டு கிடைக்காதவர்கள் கவனத்திற்கு...

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கு வாக்காளர் சீட்டு வழங்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நன்னிலம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களுக்கு வாக்காளர் சீட்டு (பூத் சிலிப்) வழங்கும் பணி அந்தந்த வட்டங்களில் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி நிலை அலுவலர்களால் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது. இப்பணி திங்கள் கிழமையும் நடைபெறும்.

இந்த சீட்டில் தொடர்புடைய வாக்காளரின் பதிவு எண், வாக்குச் செலுத்த வேண்டிய வாக்குச் சாவடி அமைவிடம் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த வாக்காளர் சீட்டுகள் தொடர்புடையவர்களிடம் மட்டுமே வழங்கப்படும். ஒரு வீட்டில் வசிக்கும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் அனைவருக்குமான அடையாளச் சீட்டுகள் அந்த வீட்டில் உள்ள குடும்பத் தலைவரோ அல்லது அந்த வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களில் ஒருவரோ பெற்றுக் கொள்ளலாம்.

மேற்காணும் இரு தினங்களில் வாக்காளார் சீட்டு கிடைக்கப்பெறாதவர்கள் தொடர்புடைய வட்டாட்சியர் அலுவலகத்தை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தகவல் அறிந்து கொள்ளலாம்.

தொலைபேசி எண்கள் விவரம்:
திருவாரூர் - 04366-222379,
நன்னிலம் - 04366 230456,
குடவாசல் - 04366 252056,
வலங்கைமான் - 04374 264456,
நீடாமங்கலம் - 04367 260456,
மன்னார்குடி - 04367 222291,
திருத்துறைப்பூண்டி - 04369 222456
ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நன்றி - தினமணி.காம்