
நமது கூத்தாநல்லூர் பெரியபள்ளிவாயில் குளத்தின் 104 ஆண்டுகள் பழமையான சுற்றுச்சுவர் தொடந்து பெய்த கனமழையின் காரணமாக கடந்த 2010 - நவம்பர் மாதம் - 27ம் தேதி குளத்திற்குள் விழுந்துவிட்டது.
அதன் தொடர்ச்சியாக குளத்தின் தண்ணீர் வெளியேற்றப்பட்டு, கடந்த 3 நாட்களாக “பொக்லின்” எனப்படும் கனரக இயந்திரத்தின் துணையுடன், கான்கிரீட் சுவர் அமைப்பதற்கான பணிகள் துரிதமாக நடைபெறுவதாக பெரியப்பள்ளிவாயில் நிர்வாகத்தினர் தெரிவித்துக் கொள்கின்றனர்.
தகவல் - ஜமால். ஷேக் அப்துல் காதர்
செயலாளர், கூத்தாநல்லூர் பெரியப்பள்ளிவாயில்