::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Tuesday, February 15, 2011

மீலாது விழா மாநாடு - பெண்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

கூத்தாநல்லூர், பிப் 15

திருவாரூர் மாவட்டத்திலேயே நமது கூத்தாநல்லூரில் நடக்கும் “அண்ணல் முஹம்மது நபி (ஸல்) பிறந்த தின” மீலாது வி‌ழா என்றால் வெகு விமர்சையாகவும் அதே சமயம் மிகவும் கண்ணியமான முறையிலும் நடைபெறும் விழாவாக அனைவரும் அறிவர்.

இவ்விழா நமது ஜஷ்ன மீலாது சொஸைட்டி சபையினரால் ஒவ்வொரு ஆண்டும் முதல் 12 நாட்கள் இரவு 9.30 மணிமுதல் 11.00 மணிவரை ஆண்டுக்கொரு புதிய சிறப்பு பேச்சாளருடன் நல்ல பல விஷயங்களை இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது தொலைக்காட்சி வாயிலாக மாற்று மத சகோதரர்களும் தெரிந்து கொள்ளும் விதமாக நடைபெற்று வருவதும், அதனை தொடர்ந்து கடைசி நாள் முழுவதும் தமிழ்நாட்‌டின் தலைசிறந்த பேச்சாளர்களைக் கொண்டு சிறப்பு தொடர் சொற்பொழிவுடன் மாநாட்டுப் பந்தல் கலைகட்டி நமது ஊர் முழுவதும் பெருநாள் கொண்டாட்டமாக அக்கம் பக்கத்து ஊரிலிருக்கும் (அ) தெருவிலிருக்கும் சொந்தங்கள் நமது வீடுகளுக்கு வருவதும், புத்தாடையுடன் ஓடியா‌டி விளையாடும் சிறுபிள்ளைகள் என பெருநாளுக்கு சற்றும் குறைவில்லாத மகிழ்ச்சியுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

எனினும் மாநாடு அன்று மாநாட்டு பந்தலை ஒட்டிய “ஓடப்பீலி சந்து” என அழைக்கப்படும் ‌‌நேருலைனில் விழாவிற்காக தற்காலிகமாக விளையாட்டு பொருட்கள் மற்றும் பெண்களுக்கான அழகுசாதன பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள் அமைக்கப்படுவதும், அதனை நாடி பெண்கள் மற்றும் சிறுவர்கள் செல்வதும் ஒவ்வொரு வருடமும் வழக்கமான விஷயமாக உள்ளது.

கடந்த காலங்களில் நடைபெற்று வந்த பாதுகாப்பு ஏற்பாடுகளில் உள்ள சச்சரவுகள் மற்றும் விரும்பத்தகாத சலசலப்புகள் இருந்து வந்ததினால்,
இவ்வருடம் முதல் நமது கூத்தாநல்லூர் பெரியப்பள்ளி ஜமாஅத் இதனை கருத்தில் கொண்டு “பெண்களுக்கு முழு பாதுகாப்பு ‌தேவை” என்பதை உணர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது.

இக்கூட்டத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு பற்றியும், கடைத் தெருக்கள் அமைப்பதற்கு ஏற்ற இடம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இறுதியில் அனைவரின் ஏகோபித்த ஒருமித்த கருத்து எட்டப்பட்டு, ரஹ்மானியா தெருவில் உள்ள நான்கு புற சுற்றுச்சுவருடன் கூ‌டிய (அல்லிக்கேணி கிரவுண்ட்) ஈத்காஹ் மைதானத்தில் கடைகள் அமைக்கவும், வெளியே பாதுகாப்பு பணியில் பெரியப்பள்ளி ஜமாஅத் ஏற்படுத்தியுள்ள இரவு நேரக் காவலர்கள் ஈடுபடவும், மைதானத்தின் உள்ளே தமிழ்நாடு காவல்துறையின் பெண் காவலர்களை கொண்டு பாதுகாப்பை தீவிரப்படுத்தவும் மு‌டிவு செய்யப்பட்டு அதற்கான ‌முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

எனவே நாளை ஒருநாள் முழுவதும் ரஹ்மானியா தெரு - அல்லிக்கேணி கிரவுண்ட் பெண்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பெண்கள் மற்றும் சிறுவர்களை தவிர யாரும் உள்ளே நுழைய அனுமதி இல்லை என கூத்தாநல்லூர் பெரியப்பள்ளியின் செயலாளர் ஜமால் ஷேக் அப்துல் காதர் அவர்கள் தகவல் அளித்துள்ளார்.

Blog Archive