::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Saturday, February 6, 2010

போலியோ சொட்டு மருந்து புகட்ட திட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் 1,15,435 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் எம். சந்திரசேகரன்.

இதுகுறித்து ஆட்சியர் செய்தியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி: போலியோ நோயை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும் இரண்டாவது கட்ட முகாம் பிப். 7-ம் தேதி (நாளை) நடைபெறுகிறது. இதற்கென இம்மாவட்டத்தில் நகரப் புறங்களில் 34 மற்றும் ஊரகப் பகுதிகளில் 782 என மொத்தம் 816 முகாம்கள் அமைக்கப்படவுள்ளன.

பொதுமக்கள் தங்களது 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் தினத்தன்று அருகிலுள்ள முகாமுக்குச் சென்று சொட்டு மருந்தை அளிக்க வேண்டும் என்றார்.

இந்த மருந்தால் ஏதேனும் ஒவ்வாமைகள் இருந்தால் அதுகுறித்து சுகாதாரத் துறை மற்றும் ஆட்சியர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கலாம். வீணான வதந்தியை யாரும் பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன் என்றார் ஆட்சியர்.

Blog Archive