திருவாரூரை அடுத்துள்ள பொதக்குடியைச் சேர்ந்த கமாலுதீன் மகன் ஹாஜா பகுருதீன் (42). இவரும், கூத்தாநல்லூா் ஏ.ஆா் ரோட்டைச் சேர்ந்த குல்முகமது மகன் ஜகபர்தீன் (36) என்பவரும் நண்பர்கள்.
இந்நிலையில், கடந்த 2001-ம் ஆண்டு, பகுருதீனுக்காக அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையை ஜகபர்தீன் தாக்கி சேதப்படுத்தினாராம். இந்த வழக்கில் ஜகபர்தீன் எதிரியாகச் சேர்க்கப்பட்டு, வழக்கு நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, கடந்த 2007-ம் ஆண்டு வழக்குச் செலவுக்காக ரூ. 50,000 வேண்டும் என ஜகபர்தீன் கேட்டாராம். பணம் தர பகுருதீன் மறுத்ததால், அப்போதிலிருந்து இருவருக்குமிடையே முன்விரோதம் ஏற்பட்டதாம்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பொதக்குடிக்கு வந்த ஜகபர்தீனை, பகுருதீன் உள்ளிட்ட 5 பேர் அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த ஜகபர்தீன் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
கூத்தாநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து, ஹாஜா பகுருதீன் உள்ளிட்ட 5 பேரைத் தேடி வருகின்றனர்.
- தகவல் / தினமணி.காம்