தமிழகத்தில் இன்றும் அநேக இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரி கடல் பகுதியில் வளிமண்டல மேல் அடுக்கில் நேற்று முன்தினம் ஒரு சுழற்சி உருவானது. இதன் காரணமாக தமிழகத்தில் நேற்றும், இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. சில இடங்களில் சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதையடுத்து அந்த காற்று சுழற்சி இன்றும் நீடிப்பதால் தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினமும், நேற்று இரவும் நமது கூத்தாநல்லூரில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கோடை வெயிலின் உஷ்னத்தில் வாடிய மக்கள் கோடை மழையின் காரணமாக மகிழ்ச்சி அடைந்தனர்.
இன்றும் வெயிலின் தாக்கம் குறைந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.