திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பிலான துளிர் அறிவியல் வினாடி-வினாப் போட்டிகளின் அனைத்துப் பிரிவுகளிலும் கூத்தாநல்லூர் மன்ப உல் உலா மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்று, சாதனை படைத்தனர்.
வினாடி வினா நிகழ்வுக்கு அறிவியல் இயக்கத்தின் ஒன்றியத் தலைவர் நீலன். அசோகன் தலைமை வகித்தார். நுகர்வோர் பாதுகாப்பு குழுச் செயலாளர் எம். அப்பாவு முன்னிலை வகித்தார்.
வினாடி- வினா நிகழ்ச்சியை கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் கே. பாரதி தொடக்கி வைத்தார். நீடாமங்கலம் ஒன்றியக் குழுத் தலைவர் பி.எம். கமால்தீன் வாழ்த்திப் பேசினார்.
போட்டிகள் மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டன. 6,7,8 ஆம் வகுப்புகள் ஒரு பிரிவிலும், 9,10 வகுப்பு மாணவர்கள் ஒரு பிரிவிலும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் மற்றொரு பிரிவிலும் பங்கேற்றனர்.
இதில் முதல் பிரிவில் கூத்தாநல்லூர் மன்பஉல்உலா மேல்நிலைப் பள்ளி முதலிடமும், பொதக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இரண்டாமிடமும், பொதக்குடி தெற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மூன்றாமிடமும் பெற்றன.
இரண்டாம் பிரிவான 9,10-ம் வகுப்புகளுக்கான பிரிவில் கூத்தாநல்லூர் மன்ப உல்உலா மேல்நிலைப் பள்ளி முதலிடமும், பொதக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இரண்டாமிடமும், நீடாமங்கலம் மேல்நிலைப் பள்ளி மூன்றாமிடமும் பிடித்தன.
மேல்நிலைப் பிரிவு போட்டிகளில் கூத்தாநல்லூர் மன்பஉல்உலா மேல்நிலைப் பள்ளி முதலிடமும், நீடாமங்கலம் மேல்நிலைப் பள்ளி இரண்டாமிடமும், பொதக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மூன்றாமிடமும் பிடித்தன.
போட்டிகளில் வென்றவர்களுக்கும், பங்கேற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் நமது www.koothanallur.co.in இணையதளத்தின் சார்பில் பாராட்டுதலையும், பயிற்சியளித்த ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.