::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Thursday, July 9, 2009

ஜூலை 9ஆம் தேதி - திருவாரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை

திருவாரூர் ஆழித்தேர் திருவிழா ஜூலை 9ஆம் தேதி நடைபெறவுள்ளதையொட்டி, அன்றைய தினம் திருவாரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எம். சந்திரசேகரன் வெளியிட்டுள்ள செய்தி:
திருவாரூர் ஆழித்தேர் திருவிழா இம்மாதம் 9-ம் தேதி நடைபெறவுள்ளது. இவ்விழாவையொட்டி மாவட்ட மக்களின் வசதிக்காக உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அன்றைய தினம் மாவட்டக் கருவூலம் மற்றும் வட்டங்களில் உள்ள சார் கருவூலங்கள் குறைந்தபட்ச அலுவலர்களைக் கொண்டு இயங்கும்.

இந்த விடுமுறை அரசுத் தேர்வுகள், நேர்க்காணல்கள் மற்றும் வங்கிகளுக்கும் பொருந்தாது. இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்து அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் ஆகஸ்ட் 1-ம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாகக் கொள்ளப்படும் என்றார் ஆட்சியர்.

நன்றி , தினமணி.காம்

Saturday, July 4, 2009

இக்னோ:மாணவர் சேர்க்கை 15-ம் தேதி வரை கால நீட்டிப்பு

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைகழகத்தின் (இக்னோ) அனைத்து பாடப் பிரிவுகளிலும் சேர ஜூலை 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மாணவர்கள் நலன் கருதி, பல்கலைக்கழகத்தின் அனைத்து படிப்புகளிலும் சேருவதற்கு விண்ணப்பிக்க ஜூலை 15-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் அந்ததந்த மண்டல மையங்களில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதற்கான இணையதள முகவரி: www.ignou.ac.in

நன்றி்- சங்கமம் லைவ்

Blog Archive