::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Tuesday, February 7, 2012

தங்கள் பேராதரவிற்கு நன்றி!

நமதூரின் பாரம்பரியமிக்க ஜஷ்ன மீலாது சொஸைட்டியினரால் நடத்தப்பட்ட 62வது தொடர் மீலாது விழா ஸீரத் மாநாடு ரபியுல்அவ்வல் பிறை 12 (05-12-2012) ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணி முதல் 01:45 மணி வரையிலும் - மாலை 3:30 மணி முதல் 6:30 மணிவரையிலும் - இரவு 9:00 மணிமுதல் 12:00 மணி வரையிலும் சிறப்பாக வெற்றிகரமாக நடைபெற்றது. அத்துடன் அந்நிகழ்வு நமது இணையதளத்திலும் நேரடி ஒளிபரப்பு (Exclusive Live!) செய்யப்பட்டது. நேரடி ஒளிபரப்பை உலகம் முழுவதிலிருந்தும் நூற்றுக் கணக்கானோர் ‌கண்டுகளித்தனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் ஜஷ்ன மீலாது ஸீரத் மாநாட்டை குறிப்பிட்ட நேரத்தில் Online Live! நேரடியாக காண வாய்ப்பு இல்லாதோருக்காக www.koothanallur.co.in/live.htm என்ற முகவரியில் சென்று Recorded Live! பதிவுசெய்யப்பட்ட நிகழ்ச்சியினை எந்நேரமும் காண வசதி செய்யப்பட்டுள்ளது.

நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியினை கண்டுகளித்த அனைத்து கூத்தாநல்லூர் வாசிகளுக்கும், தொலைபேசியின் மூலம் பாராட்டு தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி! மேலும் இனிவரும் காலங்களில் நமதூரில் நடைபெறும் பொது நிகழ்ச்சிகளை (சம்மந்தப்பட்ட நிர்வாகத்தினர் விரும்பினால்) நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளோம் என்பதை தங்களுக்கு அறிய தருகின்றோம்.

நன்றியுடன்... www.koothanallur.co.in - Team

Saturday, February 4, 2012

மகிழ்ச்சியான செய்தி! ஜஷ்ன மீலாது மாநாடு நேரடி ஒளிபரப்பு Live! Online

நமது www.koothanallur.co.in நேயர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!

நமதூரின் பாரம்பரியமிக்க ஜஷ்ன மீலாது சொஸைட்டியினரால் நடத்தப்படும் 62வது தொடர் மீலாது விழா ஸீரத் மாநாடு ரபியுல்அவ்வல் பிறை 12 (05-12-2012) ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணி முதல் 12:30 மணி வரையிலும் - மாலை 3:00 மணி முதல் 6:30 மணிவரையிலும் நமது இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு (Exclusive Live!) செய்யப்படும் ‌என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

- www.koothanallur.co.in - Team

Sunday, January 1, 2012

புரசைவாக்கம் இமாம் மவ்லானா நிஜாமுத்தீன் - வஃபாத்

நாடறிந்த மார்க்க அறிஞரும், அற்புதமான சொல்லாற்றல் மிக்கவரும், மார்க்கப் பணிகளில் மிகப் பெரும் சேவையாற்றிவரும், பன்னூல் ஆசிரியரும், திருக்குர்ஆன் விரிவுரையாளரும், சென்னை புரசைவாக்கம் பெரிய பள்ளிவாசலின் தலைமை இமாமும் தமிழகத்தின் மிகப் பெரும் தப்லீக் அறிஞரும் மவ்லானா மவ்லவீ அல்ஹாஜ் கே.ஏ. முஹம்மது நிஜாமுத்தீன் மன்பயீ ஹழ்ரத்அவர்கள், இன்று சனிக்கிழமை (31.12.2011) மாலை தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

சிந்திக்க வைக்கும் சொற்பொழிவுக்கு சொந்தக்காரரான ஆலிம் பெருந்தகையான ஹஜ்ரத் அவர்களின் மரணச் செய்தி ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்தையும் குலுக்கி எடுக்கும் துக்கச் செய்தியாகியுள்ளது.

அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை பற்றிய தெளிவான விளக்கங்களை மக்களுக்கு விளக்கியவர்கள். இதற்காக தென்னகத்தின் தாய்க்கல்லூரியாம் வேலூர் ஜாமிஆ அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபி கலாசாலையை தலைமையிடமாக கொண்டு 1996 முதல் செயல்படும் 'ஹைஅத்துஷ் ஷரீய்யா' என்ற ஷரீஅத் பேரவையில் சிறப்பான முறையில் செயலாற்றி வந்தார்கள் ஹழ்ரத் அவர்கள்.

சன்மார்க்கக் கோட்டையாகிய லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியில் மவ்லவீ ஆலிம் பட்டம் (தஹ்ஸீல்) பெற்று, தப்லீக் இயக்கத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவராகவும், சன்மார்க்க விளக்கம் தருவதில் முன்மாதிரியான அறிஞராகவும், சிக்கலான மார்க்க விஷயங்களைக் கூடப் பாமரரும் புரிந்திடும் வகையில் விவரித்துக் கூறுவதில் வல்லவராகவும் திகழ்ந்தவர்கள் ஹஜ்ரத் அவர்கள்.

தமிழகத்தில் மீலாது விழாக்களிலும், ஷரீஅத் மாநாடுகளிலும், கல்லூரி விழாக்களிலும், தப்லீக் இஜ்திமாக்களிலும் ஹஜ்ரத் அவர்களின் உரை என்றால், அதனைக் கேட்கும் கூட்டம் தனியே தெரியும். இதயங்களை ஈர்க்கும் இனிய சொல்லரசாக விளங்கினார். ஹஜ்ரத் அவர்களின் சொற்பொழிவுகள் பல்லாயிரக்கணக்கில் ஒளி, ஒலிப் பேழைகளாக உலகம் முழுவதும் பரவியுள்ளன.

யாருக்கும் பயப்படாமல், எந்தவித மிரட்டலுக்கும் அஞ்சிவிடாமல் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு மார்க்கப் பணியாற்றினார்கள்.

ஃபிக்ஹ் சட்டங்கள் குறித்து எழுந்த முறையற்ற விமர்சனங்களுக்கும், குழப்பவாதிகளால் தவறாக சித்தரிக்கப்பட்ட சட்டங்களுக்கும் ஆதாதங்களுடன் பதில் கொடுத்து குழப்பவாதிகளின் வாய்களை அடைத்தார்கள்.

உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசும் பழக்கமில்லாத மார்க்க மேதை. எதையும் இதயத்தைத் தொடும்படியாக எடுத்துக் கூறும் இயல்புள்ள அறிஞர். சிந்தனையாளர்களுக்கு தூண்டுகோல், செயல் வீரர்களுக்கு துணைவர். மொத்தத்தில் சமுதாய ஒற்றுமைக்கும், சன்மார்க்க எழுச்சிக்கும் பாடுபட்டு மறைந்துள்ள பண்பட்ட தாயி, அவர்களின் மறைவு, உண்மையில் அறிவுலகத்திற்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் ஹழ்ரத் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, அப்பழுக்கற்ற மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜன்னதுல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மாணவர்கள், ஆலிம் பெருமக்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் பொறுமையை தந்தருளவும் நமது இணையதள குழு பிரார்த்தனை‌ ‌செய்து, உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.