::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Monday, July 4, 2011

காஸ் சிலிண்டர் வைத்திருப்பவர்கள் குடும்ப அட்டையில் பதிவு செய்ய வேண்டும்

திருவாரூர் மாவட்டத்தில் சமையல் காஸ் சிலிண்டர்கள் வைத்திருப்பவர்கள் அதை குடும்ப அட்டையில் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் ச.முனியநாதன்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவாரூர் மாவட்டத்தில் ஒன்று அல்லது இரண்டு காஸ் சிலிண்டர் இணைப்புகளைப் பெற்றுள்ள பெரும்பாலான குடும்ப அட்டைதாரர்கள் காஸ் சிலிண்டர் வைத்துள்ள விவரங்களை தங்களது குடும்ப அட்டையில் பதிவு செய்யாமலும், உணவுப் பொருள் வழங்கல் துறை அலுவலர்களுக்கு தெரிவிக்காமலும் உள்ளனர்.

இவர்கள், அவரவர் குடும்ப அட்டைகளுக்கு மண்ணெண்ணெய் பெற்று வருவது தணிக்கையில் தெரியவந்துள்ளது.

இதனால், மண்ணெண்ணெய் பெற தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு உரிய மண்ணெண்ணெய் வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதைக் களைய அனைத்து எரிவாயு இணைப்புப் பெற்றுள்ளவர்களது குடும்ப அட்டைகளில் விடுதல் இல்லாமல் முத்திரையிடும் பணி ஒவ்வொரு காஸ் முகவர் அலுவலகத்திலும் ஒரு அரசு அலுவலர் வீதம் பணியில் அமர்த்தப்பட்டு நடைபெற்று வருகிறது.

எனவே, காஸ் முகவர்களிடம் சிலிண்டர் பதிவு செய்யச் செல்லும் போது, தவறாமல் குடும்ப அட்டையை எடுத்துச் சென்று அங்கு பணியில் உள்ள அலுவலரிடம் உரிய முத்திரையை பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றார் ஆட்சியர்.

Friday, June 10, 2011

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்பு

திருவாரூர் மாவட்ட ஆட்சியராக ச. முனியநாதன் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

நாகை மாவட்ட ஆட்சியராக இருந்த இவரை பணியிட மாறுதலில் திருவாரூர் மாவட்ட ஆட்சியராக நியமித்து தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது.

இதையடுத்து, ச. முனியநாதன் திருவாரூர் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

தமிழக முதல்வர் உத்தரவின்படி அரசுத் திட்டங்கள் முழுமையாகவும், உடனடியாகவும் மக்களைச் சென்று சேர்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதற்கு அரசு அலுவலர்கள் முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். திருவாரூர் மாவட்டத்தில் பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி விகிதம் பெருமளவில் குறைந்துள்ளது. இதனால், இந்த மாவட்டத்தில் கல்வித் தரத்தை மேம்படுத்த பள்ளிக் கல்வித் துறை அலுவலர்களுடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

திருவாரூர் மாவட்டம் முழுமையாக விவசாயத் தொழில் சார்ந்த மாவட்டமாக உள்ளதால், விவசாயிகளின் குறைகளை கேட்டறியவும், அவர்களது பிரச்னைகளுக்கு முன்னுரிமை அளித்து தீர்க்கவும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும். மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட காவல் துறையினருடன் இணைந்து சீரிய முறையில் செயலாற்றி, சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும் என்றார் அவர்.

முன்னதாக மாவட்ட வருவாய் அலுவலர் எம். தங்கவேல், புதிய மாவட்ட ஆட்சியர் ச. முனியநாதனிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார். திருவாரூர் மாவட்ட ஆட்சியராக இருந்த கா. பாஸ்கரன் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: தினமணி.காம்

Saturday, May 28, 2011

நமதூர் 10ம் வகுப்பு மாணவ மாணவியரின் தேர்ச்சி

நமதூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இவ்வாண்டு 10 வகுப்பு SSLC தேர்வு எழுதிய 233 மாணவிகளில் 208 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிக எண்ணிக்கையிலான மாணவிகளை களமிறக்கி இப்பள்ளி 83% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. 489 மதிப்பெண்கள் பெற்று A.நாகூர்கனி சம்சுநிஷா பள்ளியில் மட்டுமல்லாது மாவட்ட அளவிலான அரசு பள்ளிகளில் முதலிடம் பெற்றுள்ளார். 472 மதிப்பெண்கள் பெற்று B.ரஜபுநிஸா பள்ளியில் இரண்டாம் இடமும், 469 மதிப்பெண்கள் பெற்று A.யாஸ்மின் பர்வின் மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர்.

அடுத்து நமதூர் மன்ப உல் உலா மேனிலை பள்ளி மாணவர்கள் ஆங்கிலவழி கல்வி பிரிவில் 100% தேர்ச்சி பெற்றுள்ளார்கள். அதாவது 31 மாணவர்கள் தேர்வெழுதி அனைவரும் வெற்றி பெற்றுள்ளனர். தமிழ் பிரிவில் 114 மாணவர்கள் தேர்வெழுதியதில் 112 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதாவது 98 % தேர்ச்சி. இப்பள்ளியில் 478 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் K.எழில் விக்னேஷ் மற்றும் 9 மாணவர்கள் கணிதத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

நமதூர் NATIONAL MATRICULATION SCHOOL - 34 மாணவ மாணவியர் MATRIC தேர்வெழுதியதில் 26 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அதாவது 76 % தேர்ச்சியாகும். இவர்களில் T.A.நஸ்ஹத் ஷாஹிதா 472 மதிப்பெண்களுடன் முதலிடம் பெற்றுள்ளார்.

நமதூர் OXFORD MATRICULATION SCHOOL - 41 மாணவ மாணவியர் MATRIC தேர்வெழுதியதில் 31 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அதாவது 76 % தேர்ச்சி. இதில் S.நூருல் மும்தாஜ் ரிஸ்வானா 443 மதிப்பெண்களுடன் முதலிடம் பெற்றுள்ளார்.

வெற்றி பெற்றவர்களை வாழ்த்தும் வேளையில் மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு அயராது பாடுபட்ட தாளாளர்களையும், தலைமை ஆசிரியர்களையும் ஏனைய ஆசிரிய பெருந்தகைகளையும் அனைவரும் மனதார பாராட்டுவோம்.

நன்றி - தகவல்: அப்துல் அலீம்

Thursday, May 26, 2011

எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்... நமது இணையதளத்தில்

எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் நாளை வெள்ளிக்கிழமை (மே 27) வெளியாகிறது. இதனை அரசு தேர்வுகள் இயக்ககம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

9.5 லட்சம் பேர் தேர்வெழுதிய பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது.

இப்போது ரிசல்ட் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை காலை எஸ்எஸ்எல்சி, மெட்ரிகுலேஷன், ஒஎஸ்எஸ்எல்சி உள்ளிட்ட அனைத்து தேர்வு முடிவுகளும் வெளியாகின்றன.

காலை 10 மணிக்கு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. அடுத்த சில நிமிடங்களில் அவை நமது www.koothanallur.co.in இணையதளத்தில் வெளியிடப்படும்.

Monday, May 16, 2011

அன்னை கஸ்தூரிபா காந்தி பள்ளியில் இன்று (16 மே) முதல் மாணவர் சேர்க்கை

லெட்சுமாங்குடி - கம்பர் தெரு அன்னை கஸ்தூரிபா காந்தி நர்சரி & பிரைமரி பள்ளியில் இன்று (மே 16) திங்கட்கிழ‌மை முதல் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

2011-12 ஆம் ஆண்டுக்கான PreKG, LKG, UKG, 1 முதல் 5 வகுப்புகளுக்கு புதிய மாணவர் சேர்க்கை (மே 16) திங்கட்கிழ‌மை காலை 10 மணிமுதல் நடைபெற்று வருகிறது. வேலை நேரம்: காலை 10 முதல் மதியம் 2 வரை - மாலை 3 முதல் 5 மணிவரை. மேலும், விவரங்களுக்கு 04367 234384 அல்லது 9976 234384 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

பெரிதாக காண படத்தின் மீது கிளிக் செய்யவும்