::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Friday, October 14, 2011

கூத்தாநல்லூர் நகர்மன்ற தலைவர் பதவி - வழக்கில் தீர்ப்பு

கூத்தாநல்லூர் நகர்மன்ற தலைவர் தேர்தலின் சுழற்சி முறையில் மாற்றம் வேண்டி கூத்தாநல்லூர் ஜமாஅத்தின் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுத்த வழக்கு (ரிட் மனு) இன்று (14-10-2011) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

விசாரணையின் முடிவில்- எதிர்மனுதாரருக்கு (தேர்தல் ஆணையத்திற்கு) 3 வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் எனவும், இதனிடையே எதிர்வரும் 17ம் தேதி நடைபெற இருக்கும் தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டாலும், அது நீதிமன்ற தீர்ப்பிற்கு உட்பட்டது எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதன்படி வெற்றிபெற்ற வேட்பாளர் பதவியேற்க நீதிமன்ற தீர்ப்பு வரும் நாள் வரை காத்திருக்க வேண்டும். ‌‌

இந்நிலையில் முதற்கட்ட தேர்தல் நடைபெறும் கூத்தாநல்லூர் நகர்மன்ற தேர்தல் பிரச்சாரம் நாளை (15-10-2011) சனிக்கிழமை மாலை 5 மணியுடன் நிறைவடையும் இவ்வேளையில், கூத்தாநல்லூர் மக்கள் மிக ஆவலுடன் ‌எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இவ்வழக்கின் தீர்ப்பு விரைவில் நமது ‌எதிர்பார்ப்பை நிறைவேற்ற இறைவனிடம் துஆச் செய்ய வேண்டுமாய் கூத்தாநல்லூர் மக்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கூத்தாநல்லூர் நகர்மன்ற வேட்பாளர்களின் பிரசுரங்கள்









வெள்ளிக்கிழமை வெளியான துண்டு பிரசுரங்கள்







Wednesday, October 12, 2011

கூத்தாநல்லூர் நகர்மன்ற தேர்தல் - களம் காணும் வேட்பாளர்கள் வார்டு வாரியாக...

கீழே உள்ள Download பட்டனை கிளிக் செய்து உங்கள் பகுதி வேட்பாளர்களை அறிந்து கொள்ளவும்.
எதிர்வரும் 17-10-11 அன்று நடைபெறவிருக்கும் உள்ளாட்சி நிர்வாகத்திற்கான கூத்தாநல்லூர் நகர்மன்ற தேர்தலில் போட்‌டியிட விருப்பம் தெரிவித்து பின்னர் வேட்புமனு பரிசீலனை மற்றும் திரும்ப பெறுதல் ஆகியவை முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

கூத்தாநல்லூர் நகர்மன்ற தேர்தலில் தலைவர் பதவிக்காக 4 பேரும், மொத்தமுள்ள 24 வார்டுகளின் உறுப்பினர் பதவிக்காக மொத்தம் 110 பேரும் போட்டியிடுகின்றனர். முன் எப்போதும் இல்லாத அளவில் அனைத்து கட்சிகளும் தனித்தனியே களம் காணும் வேளையில், அதிகமான சுயேட்சை வேட்பாளர்களும் புதிதாக களம் கண்டுள்ளனர்.

கட்சி - சுயேட்சை என பேதம் பாராமல் தலைவர் பதவிக்கும் அந்தந்த வார்டுகளைச் சேர்ந்த உறுப்பினர் பதவிகளுக்கும் தன்னலமில்லா நல்லவர்களை, தனிமனித ஒழுக்கமுள்ளவர்களை, கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருபவர்களை, பொதுநலனில் அக்கறை கொண்டுள்ளவர்களை சரியாக அடையாளம் கண்டு, கையூட்டிற்கு மயங்காது, நேர்மையாக சிந்தித்து வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

- www.koothanallur.co.in குழுவி்னர்

கீழே உள்ள Download பட்டனை கிளிக் செய்து உங்கள் பகுதி வேட்பாளர்களை அறிந்து கொள்ளவும்.

Monday, September 26, 2011

கூத்தாநல்லூரை தனி தாலுக்காவாக மாற்ற நடவடிக்கை -காமராஜ் எம்.எல்.ஏ

சமுதாய ஒருங்கிணைப்பு கூட்டம்

கூத்தாநல்லூர் இளைஞர் இயக்கம் நடத்திய சமுதாய ஒருங்கிணைப்பு கூட்டம் நேற்று (25-09-2011) கூத்தாநல்லூர் செல்வி மஹாலில் நடைபெற்றது. கூத்தாநல்லூர் ஜமாத்தார்களும், சமூக ஆர்வலர்களும், இளைஞர்களும், சமுதாய இயக்கத்தை சேர்ந்த மாநில நிர்வாகிகளும், மாவட்ட நிர்வாகிகளும், நகர நிர்வாகிகளும், கூத்தாநல்லூரைச் சேர்ந்த அனைத்து கட்சி மற்றும் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.







கூத்தாநல்லூர் இளைஞர் இயக்க சகோதர்கள் மேடையில் மக்கள் முன்பாக வரதட்சணை வாங்க மாட்டோம் என்று உறுதி மொழி ஏற்றனர். இறுதியில் இயக்க பாகு பாடின்றி கருத்து பரிமாறி கொண்டு மதிய உணவை ஒரே ஜகனில் அமர்ந்து உண்டனர். இது இஸ்லாமிய மக்கள் அனைவரும் கொள்கை ரீதியாக பிரிந்து கிடந்தாலும் நாம் அனைவரும் இஸ்லாமிய சகோதரர்களே என்ற எண்ணத்தை பிரதிபலிகிறது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க சம்பவத்தை இஸ்லாமிய மக்கள் அனைவரும் கருத்தில் கொண்டு பாகு பாடின்றி சகோதரத்துவத்தை பேணி காக்க வேண்டுமாய் கூத்தாநல்லூர் இளைஞர் இயக்க சார்பாக கேட்டு கொள்ள பட்டது.