2014-15 -ம் கல்வியாண்டு முதல் - நமது கூத்தாநல்லூரை மையமாகக் கொண்டு
புதிய பாலிடெக்னிக் கல்லூரி (Diploma Engineering College) துவக்கம்!
டிச.12 அன்று - ஜாமிஆ கல்வி அறக்கட்டளை (JET) துவக்கம்!!
டிச.12 அன்று - ஜாமிஆ கல்வி அறக்கட்டளை (JET) துவக்கம்!!
நமதூர்
மற்றும் அதனைச் சுற்றியுள்ள பள்ளிக்கல்வி (10ம் வகுப்பு) முடித்த
மாணவர்களின் கல்வி மற்றும் தொழிற்துறை மேம்பாட்டிற்காகவும்,
இடைநிறுத்தங்களை கலையவும், இஸ்லாமிய நடைமுறைச் சார்ந்த மிகச்சிறந்த
தொழிற்கல்வி A+ தரத்துடன், வரும் 2014 - 2015 கல்வியாண்டு முதல், AICTE
பாடத்திட்டத்தின் அடிப்படையில், நமது கூத்தாநல்லூர் அருகில் JAMIAH
POLYTECHNIC COLLEGE என்ற பெயரில் புதிய கல்லூரி துவக்கப்படவுள்ளது. இன்ஷா
அல்லாஹ்!
இதுகுறித்து, அக்கல்லூரியை நிர்வகிக்கவுள்ள JAMIAH EDUCATIONAL TRUST (JET) சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
JAMIAH POLYTECHNIC COLLEGE
Management of Jamiah Educational Trust (JET),
IF not you WHO will be… - IF not now WHEN will be...
57/B, West Bazzar Street, Koothanallur – 614101.
Contact: +91 96885 59956 / +91 97157 25511
E-mail: jamiahtrust@gmail.com
வல்ல இறைவனின் திருவருளால், கூத்தாநல்லூர் மற்றும் சுற்றுப்புற மக்கள்
நீண்ட காலமாக ஆவலுடன் எதிர்பார்த்த POLYTECHNIC COLLEGE இன்ஷாஅல்லாஹ் வரும்
2014-15 கல்வியாண்டில் JAMIAH EDUCATIONAL TRUST (JET), KOOTHANALLUR
அறக்கட்டளையால் துவக்கப்படவுள்ளது.
இன்ஷாஅல்லாஹ் மிகச்சிறந்த உலகத்தரத்துடன் இயங்க உள்ள எமது கல்லூரியில் பல்வேறு சிறந்த பாடத்திட்டங்களுடன் அமைய உள்ளது:-
• Diploma in Mechatronics Engg. (DME)
• Diploma in Nano Technology Engg. (DNTE)
• Diploma in Tool & Die Making Engg. (DTDE)
• Diploma in Automobile Engg. (DAME)
• Diploma in Electrical & Electronics Engg. (DEEE)
• Diploma in Civil Engg. (DCE)
• சர்வதேச தர உபகரணங்களுடன் கூடிய சோதனைக் கூடங்கள்
• SPOKEN ENGLISH WITH EXCELLENT SUBJECT KNOWLEDGE
• தடையில்லா - மரபுசாரா மின்வசதி
• சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்
• பாதுகாப்பான, சுகாதாரமான சுற்றுச்சூழல்
• இஸ்லாமிய சூழலுடன் தொழிற்கல்வி
கல்லூரிக்கான
கட்டிடப்பணிகள், இறைநாட்டப்படி விரைவில் துவக்கப்படவுள்ளது என்பதை
அன்புடன் அறியத் தருகிறோம். தங்களின் பங்களிப்பையும் துஆவையும்
எதிர்பார்கிறோம். எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்பானாக!
No comments:
Post a Comment