தமிழக மேல் சபை தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இதில் இரண்டு பிரிவில் உள்ளவர்களே வாக்களிக்க முடியும். யாரெனில் ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிகள்.
தமிழக அரசின் மேல் சபைக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், வட்டாச்சியர் அலுவலகங்களில் சென்று சரிபார்த்துகொள்ளலாம். இதில் விடுபட்டவர்கள், மேலும் புதிதாக விண்ணப்பிக்க விரும்புவோர் நீடாமங்கலம் வட்டாச்சியர் அலுவலகத்தில் டிசம்பர் 17 வரை விண்ணப்பிக்கலாம். இறுதி வாக்காளர்பட்டியல் விரைவில் வெளியிடப்படும். எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்கவும். உங்களுக்கு தெரிந்த நமதூர் பட்டதாரிகள், ஆசிரியர்கள் இருந்தால் இந்த தகவலை தெரியப்படுத்த வேண்டுகிறோம்.
யார் விண்ணப்பிக்கலாம்?
இந்தியாவில் உள்ள ஏதேனும் ஒரு பல்கலை கழகத்தில் 2007-ல் பட்ட படிப்பு முடித்தவர்கள் மற்றும் 2007-க்கு முன்பாக பட்ட படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தொலைதூர கல்வியில் பயின்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
எங்கு விண்ணப்பிப்பது?
நீடாமங்கலம் வட்டாச்சியர் அலுவலகம்
எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்பங்கள் விநியோகிப்படும் மையங்களில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். http://www.elections.tn.gov.in/tnmlc/FORM18TAMIL.pdf இணையதளத்திலும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் (Download) செய்து நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப படிவத்துடன் சமர்பிக்க வேண்டிய சான்றிதழ்கள்:
1. பட்ட சான்றிதழ் (Degree Certificate or provisional Certificate )
2. குடும்ப அட்டை (Ration Card) அல்லது ஓட்டுனர் உரிமம் (Driving Licence)
3. வேறு முகவரியில் வசிப்பின் வீட்டு வாடகை ரசீது (அல்லது) இருப்பிடச் சான்றிதழ்
மூல சான்றிதழை (ஒரிஜினல் சர்டிபிகேட்) சமர்பிக்க வேண்டாம். சான்றிதழை நகல் (Xerox copy) எடுத்து Self Attested செய்து சமர்பித்தால் போதும். ஆனால் ஒரிஜினல் சர்டிபிகேட்டை அதிகாரி சரிபார்க்க உடன் எடுத்து செல்வது அவசியம்.
மேலும் விபரங்கள் நமதூருக்கான நீடாமங்கலம் வட்டாச்சியர் அலுவலகத்தில் (Ph: 04367 260456) அல்லது இந்த இணையத்திலும் http://www.elections.tn.gov.in/tnmlc.html தெரிந்துகொள்ளலாம்.