::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Friday, June 4, 2010

கூத்தாநல்லூரில் சாலை மறியல் - 57பேர் கைது

கலைஞர் காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் கண்டறியும் முகாம்

திருவாரூர் மாவட்டத்தில் கலைஞர் காப்பீட்டுத் திட்டப் பயனாளிகள் கண்டறியும் சிறப்பு முகாம்

ஜூன் 7-ம் தேதி முதல் ஆகஸ்ட் 18-ம் தேதி வரை நடைபெறவுள்ளது .

​இதுகுறித்து ஆட்சியர் திங்கள்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

​கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் சிறப்புச் செயல்பாடாக வரும் ஜூன் மாதம் 7-ம் தேதி முதல் ஆகஸ்ட் 18-ம் தேதி வரை 73 நாள்களுக்கு நாளொன்றுக்கு ஒரு முகாம் என்ற அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள்,​​ அரசு மருத்துவமனைகள்,​​ அரசால் அங்கீகரிக்கப்பட்ட 5 தனியார் மருத்துவமனைகள் மூலம் பயனாளிகளைக் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

​பயனாளிகள்,​​ அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள்,​​ ​ அரசு மருத்துவமனைகள்,​​ அங்கீகரிக்கப்பட்ட 5 தனியார் மருத்துவமனைகளை அணுகி முகாம் நடத்தப்படவுள்ள தேதி மற்றும் விவரங்களை அறிந்து கொண்டு,​​ குறிப்பிட்ட நாளில் சென்று பரிசோதனை செய்து,​​ அரசு செலவிலேயே உயர் சிகிச்சைப் பெற்றுக் கொள்ளலாம் என்றார்.

Blog Archive