::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Saturday, October 31, 2009

பருவ மழை : பொது மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி

திருவாரூர் மாவட்டத்தில் பல மாதங்களுக்குப் பிறகு நல்ல மழை பெய்ததால் பொது மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதன்கிழமை இரவு முதல் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்தது.

திருவாரூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக திருவாரூரில் 45.8 மில்லி மீட்டர் மழை பதிவானது.

மற்ற இடங்களில் பெய்த மழை அளவுகள் வருமாறு (அளவு மில்லி மீட்டரில்): முத்துப்பேட்டை - 43.2, குடவாசல் - 34, திருத்துறைப்பூண்டி - 18.6, நீடாமங்கலம் - 14, மன்னார்குடி - 11.2, கூத்தாநல்லூர் - 19.7, நன்னிலம் - 10.3 அளவில் மழை பதிவானது.

திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக வியாழக்கிழமை பகலிலும் விட்டு, விட்டு நல்ல மழை பெய்தது. வடகிழக்குப் பருவ மழையும் காலத்தில் தொடங்காத நிலையில், இப்போது பெய்துள்ள இந்த மழையால் பொது மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Monday, October 12, 2009

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பயனுள்ள தகவல்களை பொதுமக்கள் பெற வேண்டும்

அரசிடமிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பயனுள்ள தகவல்களை பொதுமக்கள் பெற வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் எம். சந்திரசேகரன்.

தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அக். 6 முதல் அக்.12-ம் தேதி வரை தகவல் அறியும் உரிமை வார விழா கொண்டாட அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதுதொடர்பான கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது. கருத்தரங்குக்குத் தலைமை வகித்து ஆட்சியர் பேசியது:

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம், பொது அதிகார அமைப்புகளில் ஒளிவுமறைவற்ற நிர்வாகத்துக்கான தகவல்களை பொதுமக்கள் கேட்டு பெறலாம். இந்தச் சட்டத்தின் மூலம், முழுமையாக, முறையாக, பயனுள்ள தகவல்களை மக்கள் பெற வேண்டும். இந்தச் சட்டம் குறித்து அரசு அலுவலர்களும், தொண்டு நிறுவனங்களும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார் ஆட்சியர்.

- நன்றி/தினமணி.காம்

Blog Archive