கூத்தாநல்லூரில் மன வளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளி அமைச்சர் மதிவாணன் அடிக்கல் நாட்டினார்
கூத்தாநல்லூர், ஆக.16
கூத்தாநல்லூரில் மன வளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளிக்கு அமைச்சர் மதிவாணன் அடிக்கல் நாட்டினார்.
அரசு நிதி உதவி
கூத்தாநல்லூர் நகரம் மரக்கடையில் மனவளர்ச்சி குன்றியோர்க்கான சிறப்பு பள்ளி (மனோலயம்) அரசு நிதி உதவியுடன் தொண்டு நிறுவனத்தால் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த பள்ளிக்கு கட்டிடம் கட்ட தொழிலதிபர் தி.மு.பதுருதீன் மேலபனங்காட்டான்குடியில் இலவசமாக இடம் தந்தார். தற்போது தமிழக அரசு புதிதாக கட்டிடம் கட்ட ரூ. 5 லட்சம் நிதியுதவி செய்ததை யொட்டி இதற்கான அடிக்கல் நாட்டு விழா கூத்தாநல்லூர் செல்வி மகால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு திருவாரூர் மாவட்ட கலெக்டர் M. சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.
விழாவில் பால்வளத்துறை அமைச்சர் உ. மதிவாணன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டு விழா கல்வெட்டை திறந்து வைத்தும், ஊனமுற்றோருக்கு மூன்று சக்கர வாகனம் மற்றும் உபகரணங்கள் வழங்கியும் பேசினார்.
- Thanks Dailythanthi.com